நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர். முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார் என்றால் அது மிகையாகாது. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் இவர் நடிப்பில் வெளிவந்த படம் சென்னையில் ஒரு நாள் 2 . இப்படம் இவர் எதிர்பார்த்தபடி ஹிட் ஆகவில்லை.

paamban

ஏய், சாணக்யா, சண்டமாருதம் படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் மற்றும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கூட்டணியில் ‘பாம்பன்’ என்ற படம் அறிவிக்கப்பட்டது.  ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து வரும் இதற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘SSK புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

Paamban

வித்தியாசமான கெட்- அப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

sarath kumar

இந்த படத்தின் போஸ்டர்கள் ஹாலிவுட் படமான ‘Aqua man’ பட போஸ்டர்களின் காப்பி என நெட்டிசன்கள் ஷேர் செய்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி நடிக்கவுள்ளதாக தன் ட்விட்டரில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Sarath & Varu

மேலும் வரலட்சுமியும் தன் ட்விட்டரில் “என் அப்பாவுடன் இணைந்து நடிப்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது. படக்குழுவுக்கு ஆல் தி பெஸ்ட்” என்று ட்வீட் செய்துள்ளார்.