ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய்யை உச்சாணிக் கொம்பில் வைத்து பாராட்டிய சரத்குமார்.. வாரிசு படம் இப்படித்தான் இருக்கும்

தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் இப்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு தமிழ், தெலுங்கு இரண்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்படத்தை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.

அந்த வகையில் சென்டிமென்ட், காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என்று அனைத்தும் கலந்த கலவையாக வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் விஜய்யுடன் இணைந்து பணிபுரிவது சந்தோஷமாக இருக்கிறது. இப்போதைய சினிமாவை பொறுத்தவரை அவர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களும் அவருடைய திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர் என அவர் விஜய்யை மனம் திறந்து பாராட்டியுள்ளார். மேலும் விஜய் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பதாகவும், நடிப்பு என்று வந்துவிட்டால் அற்புதமாக நடிப்பதாகவும் கூறி இருக்கிறார்.

அந்த வகையில் இந்த வாரிசு திரைப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வாரிசு திரைப்படம் வழக்கமான விஜய் படங்களை போன்று ஆக்சன் மட்டுமல்லாமல் பேமிலி சென்டிமென்ட் போன்ற விஷயங்களும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

Trending News