Connect with us
Cinemapettai

Cinemapettai

sarathkumar-rock

Tamil Cinema News | சினிமா செய்திகள்

66 வயதில் ஹாலிவுட் நடிகர் ராக் ரேஞ்சுக்கு உடலை ஏற்றிய சரத்குமார்.. முரட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள மிகப் பழமையான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். ஆனால் அவருக்கு 66 வயது என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.

அந்தளவுக்கு தன்னுடைய உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர். தினமும் காலையில் தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவருக்கு வழக்கமாம்.

சரத்குமார் மிஸ்டர் சென்னை என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் அடியாளாக வேலை செய்து பின்னர் வில்லனாக மாறினார்.

ஒரு கட்டத்தில் வில்லனாக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த சரத்குமார்,தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் பல ஹீரோக்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று சமூக வலைதளமே ஒரு நடிகரை வியந்து பார்க்கிறது என்றால் அது சரத்குமாரை தான். 66 வயதில் அசரடிக்கும் உடலமைப்புடன் இருக்கும் சரத்குமார் தான் இன்றைய ட்ரென்டிங்.

sarath-kumar-cinemapettai

sarathkumar-cinemapettai

Continue Reading
To Top