Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தோல்வி பட இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் பா ரஞ்சித்.. ஹீரோவாக நடிக்கும் சார்பட்டா நடிகர்

pa-ranjith-cinemapettai

சமுதாயப் பிரச்சனை, ஜாதி பிரச்சனை என்று பிரித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் பா ரஞ்சித். கடைசியாக இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் அனைத்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று விருது கிடைப்பதற்கு வாய்ப்பும் உள்ளது.

இயக்கத்தை தாண்டி, தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் பா.ரஞ்சித். தனது அசிஸ்டன்ட் அதியன் ஆதிரை வைத்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்தார், இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஆனந்தி நடித்த இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் தன்னை நம்பி இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர வைப்பதை பார்த்து கோலிவுட் வட்டாரங்கள் பாராட்டித்தான் வருகின்றனர்.

மீண்டும் அதியன் இயக்கத்தில் நீலம் தயாரிப்பில் அதாவது தனது சொந்த தயாரிப்பில் படத்தை தயாரிக்க உள்ளார். இந்தப்படத்திற்கு கலையரசன் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

இந்த படத்திற்கான ஆடிசன் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பரியேறும் பெருமாள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

sarpetta-parambarai-kalai

sarpetta-parambarai-kalai

எது எப்படியோ ஜாதியை திணிக்காமல் தற்போது மறந்து போய் உள்ள இளைஞர்கள் மத்தியில் அதனை விதைக்காமல் இருந்தால் சரிதான். கடைசியாக ரஞ்சித் தயாரித்து எடுத்த படம் தோல்வி என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

Continue Reading
To Top