சேரனுடன் என் உறவு சரியாக புரிதல் இல்லாமல், அவரை கொல்லும் அளவுக்கு கோபமாக இருந்தேன் என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்து இருக்கிறார்.

நாயகன் படத்தில் கமலிற்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் சரண்யா. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 1995ம் ஆண்டு சக நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து, சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்த சரண்யா தமிழ் சினிமாவின் அம்மா கதாபாத்திரத்திற்கு சோலோ நாயகியாக மாறினார்.

ராம், தவமாய் தவமிருந்து, எம் மகன் உள்ளிட்ட படங்களில் நாயகர்களுக்கு அம்மாவாக நடித்தார். தென்மேற்கு பருவகாற்று படத்தில் இவரின் அபரிமிதமான நடிப்பு இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. கோலிவுட்டின் சிறந்த அம்மா என்ற அடையாளத்தை தற்போது தக்க வைத்து கொண்டு இருக்கிறார்.

இதில், சேரன் இயக்கத்தில் வெளியான படம் தவமாய் தவமிருந்து. ராஜ்கிரணுக்கு மனைவியாக, சேரனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் சரண்யா. சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருதை இப்படம் பெற்றது. இந்திய சினிமாவில் 4 மணி நேரம் 58 நிமிஷம் என அதிக நேரம் ஓடும் படம் என்ற சாதனையை பெற்று இருக்கிறது. படத்திற்கு இன்னும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவுகிறது.

Cheran

இந்நிலையில், சேரனும், நானும் தவமாய் தவமிருந்து படத்தில் எலியும், பூனையுமாக இருந்தோம் என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மனம் திறந்து இருக்கும் சரண்யா, அப்படத்தின் இயக்குனரான சேரனை பார்த்தால் கொன்று விடலாம் போல கோபமாக இருக்கும். அப்படி ஒரு உறவு எங்கள் மத்தியில். இருவரும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அப்படப்பிடிப்பில், தான் நான் அதிகமாக அழுவேன்.

இந்த படம் போன்று இனி ஒரு கதையையும் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்கக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறேன். ஆனால், படம் முடிந்த பிறகு சேரனும், நானும் பாசமாக இருக்கிறோம். தற்போது இரு குடும்பமும் நட்புடன் இருக்கிறோம் எனத் தெரிவித்து இருக்கிறார். அம்புட்டா மேடம் உங்கள கஷ்டப்படுத்திட்டாரு!