Connect with us
Cinemapettai

Cinemapettai

vjs-saranya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் சரண்யா பொன்வண்ணன்.. கடுப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்த போது கூட கிடைக்காத பெருமை, அவர் பல முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு தேசியவிருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் ‘அருவா சண்ட’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் இந்தப் படத்தில் அறிமுக கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் நடித்துள்ள ராஜாவை விஜய்சேதுபதியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதில் “தென்மேற்கு காற்று படத்தில் விஜய் சேதுபதிக்கு அந்த கதாபாத்திரம் எவ்வளவு நச்சுனு இருந்ததோ, அந்த அளவிற்கு ‘அருவா சண்ட’ படத்தில் ராஜாவின் நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது.

மேலும் இந்த படத்தின் டப்பிங் பேசும் போது என்னையே அறியாமல் கண்கலங்கி விட்டேன். அந்த அளவிற்கு சிறந்த கதைக் களத்தை கொண்டது இந்தப் படம்.

இவ்வாறு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தைரியமாக வெளிப்படுத்தும் துணிச்சல் கொண்ட ராஜாவை நான் பாராட்டுகிறேன்.

மேலும் இந்த படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. விரைவில் இந்தப் படம் திரையிடப்படும்” என்று அறிமுக கதாநாயகனை பெருமைப்படுத்தி பேசியுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

தற்போது, சரண்யா பொன்வண்ணனின் இந்த பேச்சு விஜய் சேதுபதி ரசிகர்களிடையே காண்டை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top