Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல குணம் தான் விஜய் சேதுபதியின் முன்னேற்றத்திற்கு காரணம் – சரண்யா பொன்வண்ணன்.
‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் கோகுலுடன் இணையும் படம் தான் ஜூங்கா. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். யோகி பாபு காமெடியில் கலக்கியுள்ளார். டட்லி ஒளிப்பதிவு. சாபு ஜோசப் எடிட்டர்.

junga
இன்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. மிகவும் வித்தியாசமாக ஆண்கள் அனைவரும் வேட்டி மற்றும் ஜிப்பா அனைத்து கலந்து கொண்டனர்.

junga AL
சரண்யா பொண்வண்ணன்
விஜய் சேதுபதியின் முதல் படமான “தென் மேற்கு பருவக்காற்று” படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்பொழுது 8 வருடம் கழித்து மீண்டும் அம்மாவாக ஜூங்கா படத்தில் நடித்துள்ளார். அவர் விஜய் சேதுபதி பற்றி சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார்.

junga
“தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த பொழுது, என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா ? என்று விஜய் சேதுபதி கேட்டார். அப்போது அவரிடம், உங்களைப் போன்ற நிறைய நபர்கள் திறமையால் உயர்ந்திருக்கிறார்கள் என்றேன். முதல் படத்தில் அந்த அளவு பயந்து கொண்டிருந்த விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல், அவரிடம் இருந்தே சம்பளம் வாங்கியிருப்பதை நினைக்கும் சமயத்தில் மகிழ்ச்சியாக உள்ளது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல குணம் தான் அவரது முன்னேற்றத்திற்கு காரணம். அவர் மேலும் வளர வாழ்த்துக்கள் என்றார்.
