Videos | வீடியோக்கள்
இப்படியெல்லாமா முத்தம் கொடுப்பாங்க.. வைரலாகும் நடிகை சாரா அலி கானின் லிப்லாக்
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படம் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பிறகு ரன்வீர் சிங் ஜோடியாக, சிம்பா படத்தில் நடித்து முடித்த சாரா,. தற்போது ‘லவ் ஆஜ்கல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு சைஃப் அலி கான் லவ் ஆஜ்கல் என்ற பெயரில் நடித்திருந்தார். இதில். தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்திருந்தார் இப்போது அதே பெயரில் இன்னொரு படம் உருவாகி உள்ளது.
இதில் கதாநாயகனாக, கார்த்திக் ஆர்யன் நடித்திருக்கிறார். இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளார். இதற்கிடையே இதன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் 3 நிமிட டிரைலரும் வெளியாகியுள்ளது. அதில், ஆவேசமான முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கார்த்திக் ஆர்யனும் சாரா அலிகானும் விதம் விதமாக, முத்தமிட்டுக் கொள்ளும் அந்த லிப் லாக் காட்சிகள் வைரலாகி வருகிறது.
