Sports | விளையாட்டு
அஸ்வினின் சாதனைகளை சில நேரம் கவனிக்கப்படாமலே சென்று விடுகிறது- பாராட்டிய கங்குலி.. நன்றியை பகிர்ந்த ஸ்பின்னர்
இன்றையை தேதிக்கு இந்தியாவில் (உலகத்தில் கூட தான்) நம்பர் 1 ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். டெஸ்ட் போட்டிகளில் இன்றும் இந்தியாவின் ஆபத்பாந்தவன். கடந்த 10 ஆண்டுகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் (564) முதல் இடம் பிடித்துள்ளார். அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் (535), ஸ்டுவர்ட் போர்ட் (525) உள்ளனர். நியூஸிலாந்தின் டிம் சௌதி (472) மற்றும் ட்ரெண்ட் போல்ட் (458) நான்காம், ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஐசிசியின் இந்த இன்ஸ்டகராம் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கங்குலி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அருமையான விஷயம் இது என பகிர்ந்துள்ளார். மேலும் பல நேரங்களில் இவரின் உழைப்பை நாம் கவனிக்க தவருகிறோமோ என தோன்றுகிறது எனவும் சொல்லியுள்ளார்.
Thank you so much dada.🙏
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 24, 2019
அஸ்வின் தன் நன்றியை பகிர்ந்துள்ளார்.
For those who demeaning this stat by "how many wickets at home?"
% of wickets at home::
338/564- Ashwin (59.9%)
334/535- Anderson (62.4%)
319/525- Broad (60.7%)
266/472 -Southee (56.3%)
273/458- Boult (59.6%) https://t.co/qw3YZDZLt4— Rohit Yadav (@cricrohit) December 25, 2019
