Tamil Cinema News | சினிமா செய்திகள்
தயாரிப்பாளர்களை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்ட மீம்சை டெலீட் செய்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் !
எதிர்ப்பு கிளம்பியதாலா அல்லது தவறை உணர்ந்ததாலா என்பது புரியவில்லை, தயாரிப்பாளர்களை கிண்டல் செய்த விதமாக பதிவிட்ட டீவீட்டை சந்தோஷ் சிவன் டெலீட் செய்துவிட்டார்.

Santosh Sivan
முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் தன ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு சம்பள பணம் பல்லை இளித்துக்கொண்டு கொடுப்பார்கள், ஆனால் மற்ற டெக்னீஷியன்களுக்கு என்றால் மனம் வாராது என்பது போன்ற இந்த மீமிசை பகிர்ந்தார்.

Santhosh Sivan
பல தயாரிப்பாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்ற கேள்வியும் கேட்க தொடங்கினர். என்னடா விளையாட்டாக போட்ட பதிவு வினையாக மாறியதே என்பதை உணர்ந்த அவர் டெலீட் செய்து விட்டார்.
The Tweet ,a fwd a in english, ideleted, since its objectionable to so many well meaning producers.
And it doesn’t really mean anything— SantoshSivanASC. ISC (@santoshsivan) September 14, 2018
மேலும் அது வெறும் பார்வேர்ட் செய்யப்பட்ட ஒன்று, யாரையும் குறிப்பிடவில்லை, அதற்கு அர்த்தம் கிடையாது. நீக்கிவிட்டேன். என்று அடுத்த ட்வீட் செய்தார்.
? im a producer too??
— SantoshSivanASC. ISC (@santoshsivan) September 14, 2018
