தன் அடுத்த பட ஏடாகூட டைட்டிலை வெளியிட்ட இரண்டாம் குத்து இயக்குனர்! பார்ட் 3 ஆக இருக்குமோ

சந்தோஷ் பி ஜெயக்குமார் – தமிழ் சினிமாவில் புதிய ஜானரை கையில் எடுத்து அதில் வெற்றி கண்ட இயக்குனர். ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் படங்களை இயக்கியுள்ளார். அடல்ட் காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட முதல் இரண்டு படங்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டது; ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது. கஜினிகாந்த் பக்கா பிளாப் ஆனது.

அடுத்தடுத்த படம் டேக் ஆப் ஆகவில்லை, எனவே மனிதர் தானே ஹீரோவாக நடித்து இரண்டாம் குத்து படத்தை இயக்கினார். படமும் தீபாவளி முன்னிட்டு வெளியானது. எனினும் முதல் இரண்டு படங்கள் போல நல்ல வரவேற்பை பெறவில்லை.

இரண்டாம் குத்து மோகம் அடங்குவதற்கு முன் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இம்முறை ரொமான்டிக் காமெடி ஜானரில் படம் எடுக்க போகிறார். ஹீரோ இவரே. HB ஸ்டுடியோஸ் மற்றும் டார்க் ரூம் பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் கோடை விடுமுறை 2021 இல் ரிலீஸ். இப்படத்திற்கு Mr Virgin என தலைப்பு வைத்துள்ளார்.

santhosh p jayakumars next

நம் நெட்டிசன்கள் IAMK பார்ட் 3 ரெடியாகிறது என கிசு கிசுத்து வருகின்றனர். வேறு சிலரோ ஹர ஹர மஹாதேவகி பார்ட் 2 வாக இருக்கும். இம்முறை பேய் இருக்காது, ஆனால் தலைவன் படத்தில் பிட்டு இருக்கும் என சிலாகித்து வருகின்றனர்.