Connect with us

Cinemapettai

தளபதி 63 அப்டேட் கேட்ட சந்தோஷ் நாராயணன். மீம்ஸ் வடிவில் பதில் சொல்லிய பாடலாசிரியர் விவேக். வைரலாகுது ஸ்டேட்டஸ்.

Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 அப்டேட் கேட்ட சந்தோஷ் நாராயணன். மீம்ஸ் வடிவில் பதில் சொல்லிய பாடலாசிரியர் விவேக். வைரலாகுது ஸ்டேட்டஸ்.

சந்தோஷ் நாராயணன்

திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். பி இ கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவர். டிகிரி முடித்த பின் சில காலம் சவுண்ட் ரெகார்டிங், ப்ரோக்ராம்மிங் என இருந்தார். பின்னர் தனி இசை அமைத்துவந்து, பின்னர் இசை அமைப்பாளர் ஆனவர்.

விவேக்

இவர் பிஇ சிவில் படித்தவர். பின்னர் சட்டம் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். கவிப்பேரரசு வைரமுத்து தன் இன்ஸபிரேஷன் என பல மேடைகளில் கூறியுள்ளார். சினிமா துறையில் இவருக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொடுத்தது சந்தோஷ் நாராயணன் தான் 2015 இல் எனக்குள் ஒருவன் வாயிலாக. ஜோதிகாவின் 36 வயதினிலே படம் நல்ல பிரேக் த்ரூ கொடுத்தது. அதன் பின் மனிதர் ட்ரெண்டிங் பாடலாசிரியர் ஆக மாறிவிட்டார்.

தளபதி ஸ்பெஷல்

Thalapathy 63 Movie pooja

அட்லீ இயக்கத்தில் ரஹ்மான் இசையில் மெர்சல் பட பாடல்கள் வாயிலாக தளபதி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றார். குறிப்பாக ஆளப்போறன் தமிழன் பாடல் விஜய்யின் அரசியல் நடவடிக்கைக்கு பெரிய பிளஸ் ஆக அமைந்தது. அதனை தொடர்ந்து சர்க்கார் படத்திலும் வாய்ப்பு அமைய அதையும் அசதி விட்டார் இவர். ஒரு விரல் புரட்சி வைரல் புரட்சி ஆனது . அதனை தொடர்ந்து மீண்டும் தளபதி 63 யில் இவர் இணைகிறார்.

விவேக் ட்விட்டரில் ஆகிட்டிவாக இருப்பவர். சந்தோஷ் நாராயணன் விஜயின் பைரவா pad அதுக்கு இசை அமைத்தவர். இந்நிலையில் இவர் ட்விட்டரில் தட்டிய ஸ்டேட்டஸ் வைரலாகி வருகின்றது.

“ஹாய் விவேக் சார். எப்படி இருக்கீங்க ? நல்ல சாப்புடுங்க.நிறைய தண்ணி குடிங்க. வீட்டில் இருப்பவர்களை விசாரித்ததாக சொல்லுங்க அப்படியே 63 அப்டேட் அப்போ அப்போ கொடுங்க. இங்க எல்லாம் நல்லா போகுது. ஓகே பை சார்.” என்றே தளபதி படம் பற்றி கேட்டார்.

mem

உடனே விவேக்கும் வடிவேல் ஸ்டைலில் “ஏன் தெய்வமே” என வடிவேலு மேமே டெம்ப்லேட் ஒன்றை ஷேர் செய்தார்.

இவர்களின் இந்த சம்பாஷணையை வியாஜ்ஜிய ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top