fbpx
Connect with us

Cinemapettai

12 வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகம்.! இதோ மாஸ் அப்டேட்

News | செய்திகள்

12 வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகம்.! இதோ மாஸ் அப்டேட்

ரஜினி நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தை பி வாசு தான் இயக்கியிருந்தார் படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேல் , வினித், மாளவிகா, நாசர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

நடிகர் ரஜினி பாபா படத்திற்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆனதால் இந்த திரைப்படம் 800க்கும் மேற்பட்ட நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது, இந்த திரைப்படத்தை ஹிந்தியில் 2007 ஆம் ஆண்டு பூல் பூலையா என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். தமிழில் எப்படி ஹிட்டடித்தது அதேபோல் ஹிந்தியிலும் ஹிட்டானது.

ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்கள், இதன் இரண்டாம் பாகத்தின் கதையை பர்ஹத் சாம்ஜி உருவாக்கியுள்ளார் இதற்கு தயாரிப்பாளர் பூஷன் குமார் ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன, அதேபோல் இயக்குனராக முதல் பாகத்தை இயக்கிய பிரியதர்ஷனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால் முதல் பாகத்தில் நடித்த அக்ஷய்குமார், வித்யாபாலன் நடிப்பார்களா என தெரியவில்லை ஏனென்றால் அக்ஷய் குமார் தற்போது காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார், மீண்டும் பேய் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்வாரா இல்லையா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இதே போல் தமிழில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top