Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாரிசு நடிகர்கள் என யாரை குத்திக் காட்டுகிறார் சாந்தனு.. அவரும் வாரிசு நடிகர் தான் என்பதை மறந்து விட்டாரோ?
சமீபகாலமாக சினிமாக்களில் வாரிசு கலாச்சாரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. புதிதாக யாரும் நடித்து புகழ் பெற்று விட்டால் உடனடியாக அவர்களை எப்படி காலி செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து இடங்களிலும் இது பரவலாக காணப்படுகிறது. மலையாள சினிமாக்களிலும் தெலுங்கு சினிமாக்களிலும் பெரும்பாலும் வாரிசு நடிகர்கள் தான் இருக்கின்றனர்.
ஆனால் தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் வாரிசு நடிகர்களாக மட்டுமில்லாமல் தன்னிச்சையாகவும் பல நடிகர்கள் முன்னிலையில் வந்துள்ளனர். ஏன் எடுத்துக்காட்டாக ரஜினிகாந்த், அஜித்குமார் போன்றவர்களைச் சொல்லலாம்.
அதேபோல் வாரிசு நடிகர்களாக வாழ்ந்த பலரும் முன்னணி நடிகர்களாக மாறவில்லை. வெகு சிலரே மக்களால் ஏற்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் விஜய், தனுஷ், சூர்யா, கார்த்தி ஆகியோரை குறிப்பிட்ட சொல்லலாம்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக வலம் வந்த பாக்கியராஜின் மகன் சாந்தனு. வாரிசு நடிகராக இருக்கும் இவருக்கே ஒரு குறிப்பிட்ட குரூப் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுக்கப்பட்டதை மறைமுகமாக சாடியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நடராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலிவுட் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஒரு குறிப்பிட்ட வாரிசு அராஜகம் இருக்கத்தான் செய்கிறது என தெரிவித்திருந்தார்.
அதற்கு வாரிசு நடிகர் சாந்தனு, வாரிசு கலாச்சாரம் என்பதைவிட ஒரு குறிப்பிட்ட குரூப் ஒரு சிலர் மட்டுமே புகழ் பெற வேண்டும் எனவும், அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

shanthanu-tweet
வாரிசு நடிகருக்கு வாரிசு நடிகர்களே பிரச்சனையா என தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யார் அந்த குரூப் என்பதை கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
