Reviews | விமர்சனங்கள்
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 திரைவிமர்சனம்.

தில்லுக்கு துட்டு 2
லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலாவுடன் சந்தானம் மீண்டும் இணையும் படம். புதிதாக எதுவும் வித்யாசம் வேண்டாம் என தங்களுக்கு பழக்கப்பட்ட ஹிட் கொடுத்த ஹாரர் காமெடி ஜானரிலேயே மீண்டும் இணைந்துள்ள படம். இப்படம் நம் தில்லுக்கு பிடித்ததா , துட்டுக்கு வொர்த்தா என வாங்க பாப்போம் ..
கதை
(சந்தானம் – ராம் பாலா கூட்டணியில் அதை எதிர்பார்க்கலாமா ?)
தன் தாய்மாமனுடன் (மொட்டை ராஜேந்திரன்) ஏரியாவில் குடித்துவிட்டு அராத்து செய்துக்கொண்டு இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் விஜியாக சந்தானம். படத்தின் ஆரம்பம் பிஸ்தா கார்த்திக்கை நமக்கு கண் முன் கொண்டு வர, படிப்படியாக நகர்கிறது கடத்தி சந்தானத்தின் காதலை நோக்கி.

dt 2 FLP
ஹீரோயினிடம் காதலை சொல்லுபவர்கள் அனைவரயும் பேய் கொடூரமாக தாக்குகிறது. சந்தானத்துக்கும் அதே நிலை தான். காதலியின் அப்பா கேரளாவில் மாந்த்ரீகம் செய்பவர் என்பதால் மாமாவும் – மாப்பிள்ளையும் அங்கு சென்று அதகளம் செய்ய வருகின்றது இடைவேளை.
பின்னர் ஊர்வசியும் காமெடி கலக்களில் இணைகிறார். பேயின் ஒரிஜினல் பிளாஷ் பேக், எப்படி அதனை டீமாக சேர்ந்து அடக்குகிறார்கள் (நம்மை சிரிக்க வைக்கிறார்கள்) என்பதோடு முடிகிறது படம்.
பிளஸ்
சந்தானம் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணி, ஷபிரின் பின்னணி இசை, இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான ஓடும் நேரம்
மைனஸ்
அதிக மலையாள வசனங்கள் (இரண்டாம் பாதியில்), இரட்டை விஷய சமாசாரங்கள்.

Dhilukku thuttu 2
சினிமாபேட்டை அலசல்
இந்தக்கூட்டணியின் டார்கெட் பி மற்றும் சி சென்டர் தான். அவர்களை திருப்த்தி படுத்தும் அனைத்துமே உள்ளது படத்தில். சரியான கலவையில் காதல், நகைச்சுவை என மிக்சிங் செய்து அசத்திவிட்டனர் இந்த டீம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட்
லாஜிக் பற்றி யோசிக்காமல், பொழுதுபோக்கிற்கு செல்பவர்களுக்கு கட்டாயம் மகிழ்ச்சி தான். ஆகமொத்தம் நீங்கள் கொடுக்கும் துட்டுக்கு ஹாப்பியாக தியேட்டர் விட்டு நிறைவாக வெளியே வருவது உறுதி.
