சந்தானம், யோகி பாபு எல்லாம் இவர் முன்னாடி ஒன்னுமே இல்லை.. 1940ளிலே தெறிக்கவிட்ட ஹீரோ!

தற்போது தமிழ் சினிமாவின் சந்தானம், யோகி பாபு டைமிங் காமெடி மற்றும் கலாய்க்கும் காமெடி செய்வதில் பின்னிப் பெடல் எடுக்கின்றனர். ஆனால் அப்பொழுதே இவருக்கு நிகராக ஒரு ஹீரோ இருந்துள்ளார். 1941 ஆண்டு ஏ.டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ.வி. மெய்யப்பன் இயக்கிய படம் சபாபதி.

இந்த படத்தில் வரும் ஹீரோ டி ஆர் ராமச்சந்திரன். இவர் இந்தப்படத்தில் பள்ளி படிக்கும் ஒரு மாணவனாக நடித்திருப்பார். அந்த படம் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஓடி அனைவரையும் சிரிக்க வைத்த சிறந்த நகைச்சுவை திரைப்படமாக அந்தக் காலத்தில் பட்டி தொட்டி எங்கும் திரையரங்கில் ஓடி பட்டையை கிளப்பியது.

இந்தப்படத்தில் டி ஆர் ராமச்சந்திரன் நடித்த கதாபாத்திரத்தில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர், படிப்பை தவிர வாத்தியாரை கிண்டல் செய்வதில் அதிக நாட்டம் இருக்கும் இளைஞனாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

மேலும் இந்தப்படத்தில் இவரது பெற்றோர்கள் இவர் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு படித்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இவர்கள் அடிக்கும் லூட்டி தான் படத்தின் கதை.

மேலும் சபாபதி படத்தில் டி ஆர் ராமச்சந்திரன் உடன் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான காளி என் ரத்தினமுடைய நகைச்சுவையும் இந்தப் படத்தை பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அப்பொழுது சந்தானம் மற்றும் யோகிபாபு காமெடிக்கு நிகரான காமெடியை டி ஆர் ராமச்சந்திரன் செய்திருப்பார்.

ஆகையால் நகைச்சுவைக்கு பெயர் போன சபாபதி திரைப்படம் டைட்டிலை அப்படியே வைத்து சந்தானம் கதாநாயகனாக திக்கி திக்கி பேசும் கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்த ஜாலியான என்டர்டைன்மென்ட் திரைப்படத்தில் நடித்து அதை கடந்த ஆண்டு வெளியிட்டாலும் அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்