fbpx
Connect with us

நண்பனுக்காக சந்தானம் செய்த செயல்- மனதை நெகிழ வைக்கும் போட்டோ இதோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நண்பனுக்காக சந்தானம் செய்த செயல்- மனதை நெகிழ வைக்கும் போட்டோ இதோ

சின்னத்திரை டு வெள்ளித்திரை என பிரபலமாகி கலக்கி வருபவர் சந்தானம். அவரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் மிக முக்கியானவர் டாக்டர் சேதுராமன். ஆரம்ப காலங்களில் சந்தானத்துக்கு மிகவும் பக்க பலமாக இருந்தவர். சந்தானம் ஜெயிக்க வேண்டும், என ஆசைப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர்.

santhanam

santhanam

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களுடன் ஒரு ஹீரோவாக நடித்து இருப்பார். மேலும் வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா, 50 / 50 படங்களில் நடித்தவர்.

நம் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகை, நடிகர்களுக்கும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் டாக்டராக இருந்தவர். கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 36 வயதே ஆன இவரது மரணம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சேதுவின் பிறந்தநாளன்று சந்தானம் அவரது மருத்துவமனையின் (Zi Clinic ) புதிய பிரான்ச் ஒன்றை ECR ரோட்டில் துவக்கி வைத்துள்ளார்.

santhanam with standee of sethuraman

நண்பன் உயிருடன் இல்லாத காரணத்தால், அவரின் standee அருகில் நின்று போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

Continue Reading
To Top