தவளை போல் வாய் கொடுத்து மாட்டிக் கொண்ட சந்தானம்.. DD ரிட்டன்ஸ்-2 வுக்கு வந்த ஆப்பு

Santhanam who was caught giving mouth and problem arise for DD Returns-2: தவளை தன் வாயால் சத்தமிட்டு, தான் இருக்கும் இடத்தை பாம்பிடம் காட்டி பலியாவது போன்று, தமிழ் திரை உலகிலும் அதேபோன்று வாய் கொடுத்து ஆப்பை வாங்கிக் கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

சின்னத்திரை லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் சந்தானம். காமெடியில் முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து படங்களை ஹிட் ஆக்கி விடுவதில் வல்லவர்.

நண்பன்டா, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் காமெடியில் அல்டிமேட் பண்ணியிருந்தார் சந்தானம். இந்த படங்களில் நடித்ததன் மூலம் ஆர்யா மற்றும் சந்தானம் நிஜத்திலும் இணை பிரியா நண்பர்கள் ஆனார்கள், இது உலகறிந்த விசயம் தான்.

தமிழ் சினிமாவில் காமெடியனாக பல படங்களில் நடித்து பிசியாக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் நாயகனாக மட்டுமே நடிப்பேன். காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவு கட்டினார். 

அதன் பின் இவர் நடித்த தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ் , வடக்குப்பட்டி ராமசாமி என பல படங்களில் நாயகனாக நடித்து தடம் பதித்தார்.

இதனை தொர்டந்து தற்போது டிடி ரிட்டன்ஸ் 2  திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சந்தானம். இப்படத்தை ஆர்யா தான் தயாரிக்க உள்ளார்.

விழா ஒன்றில் பேசிய சந்தானம் அவரது ஒரு படத்தை தயாரிக்க,  கதையை, முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம்  கொண்டு சென்றதாகவும், அவர் பல கண்டிஷன்கள் போட்டதாகவும் கூறியுள்ளார்.

அது மட்டும் இன்றி அவரிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வருவதே பெரிய பாடாக இருந்தது என்று காமெடியாக பேசினார் சந்தானம். இதை கேட்ட ஆர்யாவும் விழுந்து விழுந்து சிரித்தாராம்.

சந்தானத்தின் பேச்சால் கடுப்பான தயாரிப்பாளர்

முடிவில் அந்த தயாரிப்பாளர் யார் என்றால் நடிகர் ஜீவாவின் தந்தை பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி. ஆர்யாவின் பல படங்களுக்கும்  நிதி வழங்குவது ஆர் பி சவுத்ரிதானாம்.

இப்பொழுது இதனை கேள்விப்பட்ட ஆர் பி சவுத்ரி, ஆர்யா தயாரிக்க இருக்கும் டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படத்திற்கு நிதி வழங்க மறுத்துவிட்டாராம். இனி ஆர்யாவோட எந்த படத்துக்கும் சௌத்ரியிடம் இருந்து நிதி வருவது கஷ்டம் தான்

சந்தானம் அவர் வாயால அவர் கெட்டது மட்டுமல்லாமல், தன் நண்பனோட வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்த பெருமைக்கு ஆளானார்.

- Advertisement -