Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல கட்சியில் இணையவிருக்கும் சந்தானம்.. அடுத்த மீனும் சிக்கிருச்சு போல!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சந்தானம். இவர் தற்போது படங்களில் ஹீரோவாக நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு ஆர் கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் ‘பிஸ்கோத்’ படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
மேலும் இந்தப் படத்தை தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுடன் நடிகர் சந்தானம் உட்பட்ட ‘பிஸ்கோத்’ படக் குழுவினர் இணைந்து கமலா தியேட்டரில் பார்த்தனர்.
இந்த நிலையில் வடபழனி பிரசாத் லேப்பில் ‘பிஸ்கோத்’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
அப்போது ஒரு செய்தியாளர் சந்தானத்திடம், ‘நீங்கள் பாஜகவில் இணைய போவதாக தகவல் கிடைத்துள்ளது. அது உண்மையா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சந்தானம், ‘நான் பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் பொய்யானது. அப்படிப்பட்ட எண்ணம் எனக்கில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தான் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை விட காமெடியாக உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் சந்தானம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இவ்வாறு, ‘தமிழகத்தில் உள்ள பெரும் புள்ளிகளை நோக்கி பாஜக வலைவிரித்து வருவது ஏன்’ என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர் தமிழ் மக்கள்.
