santhanam as action hero
santhanam-as-action-hero

சந்தானம் இவரை  என்ன தான் விஜய் டிவி வளர்த்துவிட்டாலும், தனது கடின உழைப்பால் ஒரு நிலையான அடையாளத்தை பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

சின்னத்திரையில்  இருந்து காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்தவர். அதில் வெற்றியும் கண்டார். பின்னர் தமிழ் திரைப்படத்துறையில் ஹீரோவாக மட்டும் நடிப்பதாக புது முடிவு எடுத்தார். சந்தானம் குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபகரமான படத்தை கொடுத்தார். “இனிமே இப்படிதான்”, “தில்லுக்கு துட்டு” போன்ற படங்கள் இவர் மார்க்கெட்டை உயர்த்தியது.

இந்த வாரம் ரிலீசான ‘சக்கபோடு போடு ராஜா’ படம், தெலுங்கில்   கோபிசந்த், ராகுல் ப்ரீத் நடிப்பில் வெளியான  “லௌக்யம்” என்பதன் ரீ- மேக் ஆகும்.

Santhanam

படம் ரிலீசாவதற்கு முன் முதல் லுக் போஸ்டர், டீஸர், ட்ரைலர், சிங்கள் பாடல் என்று விளம்பரம் செய்வது போல, படம் ரிலீசுக்கு பின் தியேடேர் விசிட் செல்வது என்பது வாடிக்கை ஆகி விட்டது. சிம்பு என்றால் ஆல்பர்ட்  தியேடேர் வருவார். ஜெயம் ரவி ags  டி நகர் வருவார் என்று ஒரு ட்ரெண்ட் உண்டு. சமீபத்தில் கூட நயன்தாரா தன் அறம் படத்தின் பொழுது காசி   தியேடேர், கமலா சினிமாஸ் வந்தார். வேலைக்காரன் சிவகார்த்திகேயன் தன் ரசிகர்களுடன் வெள்ளிக்கிழமை காசி திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ பார்த்தார்.

இந்நிலையில் சந்தானம் சற்று வித்யாசமாக சென்னையில் தியேடர்கள் செல்லாமல், புது முயற்சியாக மதுரை செல்கிறார் என்ற அறிவிப்பு வந்தது. நேற்று மதுரையில் மாலை  பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் சந்தானம்.

பின்னர் மாலையில் தியேடர் விசிட் அடித்தார்.

தியேடர் உரிமையாளர்கள், மற்றும் தன் ரசிகர்கள் என்று அனைவரிடமும் பேசினார்.

இத்தோடு இது முடியும் என்று பார்த்தல், இன்று கோயமபத்துர் திரையரங்க விசிட் இன்று மாலை செல்கிறார். இதோ அந்த லிஸ்ட் விவரம் .

சினிமாபேட்டை கிசு கிசு

இரண்டு பிரபல நகரங்களை முடிக்கும் சந்தானம், அநேகமாக கிறிஸ்துமஸ் தினமான நாளை, நம் சென்னையில் உள்ள திரைஅரங்குகளில் விசிட் செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று குஷியில் உள்ளனர் இவர் ரசிகர்கள்.