Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவில் அறிமுகமாகும் குட்டி சந்தானம்.. அதுவும் அந்த பாலிவுட் நடிகருடன்!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் என்றால் அது சந்தானம் தான். ஏனென்றால் ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேல் மட்டுமே காமெடிகளில் நடித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு பிறகுதான் சந்தானத்தின் சினிமா துறை ஆட்சி காலம் தொடங்கியது. வரிசையாக பல படங்களில் காமெடி கதாபத்திரத்தில் ஆட்சி செய்து சந்தானம் ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோ அவதாரம் எடுக்க தொடங்கினார்.
வடிவேலு பாணியை தான் சந்தானமும் தற்போது ஃபாலோ செய்து வருகிறார். காமெடியாக நடித்த இவர் தற்போது நான்கு பேர்களை பந்தாடும் அளவிற்கு ஹீரோவாக சண்டைக் காட்சிகளில் நடித்து வருகிறார்.
சந்தானத்தின் மகனான நிபுன் சினிமாவில் அறிமுகமாக உள்ளார், அதுவும் யார் படத்தில் தெரியுமா? சினிமாவுக்கு முதலில் நடன இயக்குனராக அறிமுகமான பிரபுதேவாவின் திரைப்படத்தில் தான் அறிமுகமாக உள்ளார்.
பிரபுதேவா தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் மற்றும் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

santhanam
பிரபுதேவாவின் படத்தில் நடிக்க இருப்பதால் சந்தானத்தின் மகன் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எது எப்படியோ இருவரும் இணைந்து திரையில் வெற்றியை கண்டால் போதும் என சந்தானத்தின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சினிமாத்துறைக்கு இன்னொரு சந்தானம் கிடைத்து விட்டார் போல என பலரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

prabhu-deva
