தன் அடுத்த பட போஸ்டர் சர்ச்சையால் டகால்டி வாங்கிய சந்தானம்.! வைரலாகும் ட்வீட்

சந்தானம் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமேல் இப்படித்தான், சக்கபோடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார்.

சந்தானம் ‘டகால்டி’ எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தின் முதல் போஸ்டர் புகைப்பிடிப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு பல சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

அதற்கு சந்தானம் அவரது ட்விட்டர் பக்கத்தில் நான் புகை பிடிப்பது போன்று உருவாக்கப்பட்டு இருந்தது என் படத்தின் முதல் போஸ்டர் கவனக்குறைவால் வெளியிடப்பட்டுவிட்டது என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.

உடல் நலத்துக்கு தீங்கு விளைக்கும் வகையில் இனிவரும் அடுத்த படங்களில் இதுபோன்ற புகை பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் முதல் தோற்ற புகைப்படங்கள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment