காமெடி நடிகராக அறிமுகமான சந்தானத்திற்கு நல்ல முகவரியை தேடிக் கொடுத்தவர் ராஜேஷ்.எம். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களில் ஹீரோக்கள் தனிதனியாக இருந்தாலும் காமெடியன் சந்தானம்தான். ராஜேஷ் கடைசியா இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு படத்தில் மட்டும் சந்தானம் இல்லை. அதற்கு காரணம் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

“இனி சந்தானத்தை வைத்து படம் இயக்கினால் ஹீரோவகாத்தான் இயக்குவேன். எனக்கும், அவருக்கும் இருக்கிற நட்பை பயன்படுத்தி காமெடியனாக மட்டும் நடிக்க வைக்க மாட்டேன்” என்று ராஜேஷ் கூயிருந்தார். அதன்படி ராஜேஷ் அடுத்து இயக்கப்போகும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஆனந்தி அல்லது நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடிப்பார்கள் என்று தெரிகிறது.