Connect with us
Cinemapettai

Cinemapettai

நாட்டாமை ரேஞ்சுக்கு பில்டப் ஆகும் சந்தானத்தின் புதிய படம்.. இவருக்கு இந்த கேரக்டர் செட் ஆகுமா?

santhanam-sarathkumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாட்டாமை ரேஞ்சுக்கு பில்டப் ஆகும் சந்தானத்தின் புதிய படம்.. இவருக்கு இந்த கேரக்டர் செட் ஆகுமா?

தென்னிந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த நாட்டாமை படத்தின் சாயலில் சந்தானம் நடிக்கும் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமெடி நாயகனாக இருந்து தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் சந்தானம். ஆனால் எதிர்பார்த்த அளவு ஹீரோவாக வெற்றி கிடைக்கவில்லை. சொற்ப அளவில்தான் வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார்.

அதுவும் இவரது காமெடி காட்சிகளுக்கு மட்டுமே ஓடிய படங்கள். காமெடியனாக ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தாலும் தலை கீழாகத்தான் குதிப்பேன் என தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறார் சந்தானம்.

அந்த வகையில் முதல் முறையாக அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். பக்கா கமர்சியல் படமாக உருவாகும் இந்த படத்தை நாட்டாமை படம் ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறார்கள்.

santhanam-cinemapettai

santhanam-cinemapettai

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்க உள்ளார். இவர் ஈரம், வல்லினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் என்பவரின் அசிஸ்டன்ட் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத்து படம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top