Connect with us

Cinemapettai

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. சந்தானம் படத்தின் சூப்பர் தகவல்

santhanam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. சந்தானம் படத்தின் சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஆகிவிட்டது என்ற செய்தி சமீபத்தில் பரவி வருகிறது. அதாவது பல படங்களில் யோகி பாபு காமெடியனாக நடித்து வருகிறார், அவருக்கான திறமைக்கு கிடைத்த பரிசு என்றே கூறலாம். ஆனாலும் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நகைச்சுவை உணர்வு கொண்ட நடிகர்கள் தற்போது இல்லை.

சதீஷ், சூரி ஆகியோர்கள் களத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடியின்  உச்சத்தில் இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக உருவெடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் போன வருட தில்லுக்கு துட்டு 2, A1 ஆகிய படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.

இந்த வருட தொடக்கத்திலேயே தனது இரண்டு படங்களையும் ஒரே தேதியில் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதனால் சந்தானம் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அதாவது சந்தானம் நடிப்பில் வெகுநாட்களாக முடங்கிக் கிடந்த ‘சர்வர் சுந்தரம்’ படம் வரும் ஜனவரி 31-ம் தேதி வெளிவருவதாக தெரிவித்துள்ளன.

இதே தேதியில்தான் மற்றுமொரு படமான டகால்டி வெளிவருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் சினிமா துறையில் ஒரே நடிகரின் படம் ஒரே தேதியில் வெளியிடுவதை நிறுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த இரண்டு படங்களும் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் கண்டிப்பாக இதில் தயாரிப்பாளர்கள் பஞ்சாயத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் டகால்டி ஜனவரி 31 வெளிவருவதில் சந்தேகம்தான். ஆனால் ரசிகர்கள் எந்த படமானாலும் சந்தானத்தின் நகைச்சுவை கலந்த திறமையான நடிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top