Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தானத்தின் மஜாவான படம் தியேட்டரில் ரிலீஸ்! பிரபல இசை அமைப்பாளர் நிலை என்னவாகுமோ

சந்தானம் காமெடியன் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஆரம்பத்தில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, மினிமம் கேரண்டி ஹீரோ என்ற பெயரையும் நம் கோலிவுட்டில் சம்பாதித்தார். எனினும் சந்தானம் படமெனில் சி மற்றும் பி சென்டர் ரசிகர்கள் தான் தியேட்டரில் வந்து படத்தை பார்த்தனர் என்பதே உண்மை. சற்றே வித்தியாசமாக முயற்சி செய்தாலும், அப்படம் மக்களிடம் அதிக வரவேற்பை பெறுவதில்லை.

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் ஏ 1 படம் வெளியாகி நல்ல ஹிட் அடித்தது, லாபமும் சம்பாதித்து கொடுத்தது. ஸ்டைலிஷான காமெடி படமாக அது அமைந்தது. சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு பிளஸ்.

அதே கூட்டணி மீண்டும் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இணைந்துள்ளனர். யூ ட்யூப் வாயிலாக பிரபலமாகும் கானா பாடகர் ரோலில் சந்தானம் நடித்துள்ளார் என்பது தலைப்பு பார்த்தவுடனே பலரும் கண்டு பிடித்தனர். ட்ரைலர் பார்த்த பின் இது சிரிப்பு சரவெடி என உறுதியானது.  பாடல்கள் ஹிட்.

இந்நிலையில் படத்தை திரை அரங்கில் வரும் பிப்ரவரி 12 ரிலீஸ் செய்வதாக இன்று போஸ்டருடன் அறிவிப்பு வந்துள்ளது. மாஸ்டர் படம் கொடுக்கும் தைரியத்தில் லார்க் ஸ்டுடியோஸ் இந்த முடிவை எடுத்துள்ளனர் என தெரிகின்றது.

paris jeyaraj

குறைந்த பட்ஜெட் படம், எனவே காமெடி க்ளிக் ஆகும் பட்சத்தில் அணைத்து தரப்புக்கும் லாபமாக அமையும் என்றே தோன்றுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களை எப்படி பங்கமாக கலாய்த்து இருப்பார்கள் என பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் சந்தானத்தின் ரசிகர்கள்.

Continue Reading
To Top