காமெடியில்  கலக்கும் சந்தானம்  இப்போது ஹீரோவாகவும் நடிக்க தொடங்கி விட்டார். இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைதொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த படம் குறித்து அண்மையில் பேசிய அவர், ” சந்தானம் படம் வெறும் காமெடி படம் இல்லை. அதைத்தாண்டி படத்தில் சில பல விஷயங்கள் உண்டு மேலும் என்னுடைய ஸ்டைலில் இந்த படம் இருக்கும், சந்தானத்திற்கு புது மாதிரியான படமாகவும் இருக்கும் ” என கூறியுள்ளார். மேலும் இதில் நடிக்க சந்தானம் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்..