கைவிட்ட சினிமா.. கலர்ஸ் டிவி சீரியலுக்கு வந்த பிரபல இயக்குனர்

சினிமாவில் சாதிக்க முடியாத பலரும் தற்போது சீரியல் பக்கம் வரத் தொடங்கிவிட்டனர். இவ்வளவு ஏன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு வேட்டைக்காரன் எனும் படத்தை கொடுத்த பாபுசிவன் என்பவரே தற்போது சன் டிவியில் சீரியல் இயக்கிவருகிறார்.

எவ்வளவு பெரிய நடிகருடன் படம் செய்தாலும் அந்த படம் வெற்றி அடைந்தால் மட்டுமே அந்த இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்பது அறிந்த விஷயம்தான்.

அதிலும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் கொஞ்சம் சொதப்பினாலும் அவர்களது கேரியர் மொத்தமும் அடிவாங்கிவிடும். படம் வெற்றியடைந்தால் மட்டுமே அவர்களது தலை தப்பிக்கும்.

அப்படி முன்னணி நடிகர்கள் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் பல இயக்குனர்கள் தற்போது தமிழ் சினிமாவில் தடம் தெரியாமல் போய்விட்டனர். ஆனால் இப்போதெல்லாம் சீரியல் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

அப்படி சந்தானமும் அவரது மறைந்த முன்னாள் நண்பர் சேதுவும் இணைந்து நடித்த வாலிப ராஜா என்ற படத்தை இயக்கிய சாய் கோகுல்நாத் என்பவர் கலர்ஸ் டிவியில் அபி டெய்லர் என்ற சீரியலை இயக்க உள்ளாராம்.

ஜீ தமிழில் பூவே பூச்சூடவா புகழ் ரேஷ்மா முரளிதரன் என்பவர் கலர்ஸ் டிவியில் முதல் சீரியலில் நடிக்க உள்ளார். மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கவர்ச்சி நடிகை சோனா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

abi-tailor-new-serial
abi-tailor-new-serial
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்