Tamil Cinema News | சினிமா செய்திகள்
KGF யாஷ் கெட்டப்பில் உருமாறிய சந்தானம்.. வெறித்தனமாக வைரலாகும் அடுத்தப்பட கெட்டப்
ஒரு காலத்தில் டைமிங் காமெடியில் கவுண்டமணி போல் கலக்கிக் கொண்டிருந்தவர் சந்தானம். மெல்ல மெல்ல காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி தற்போது ஒரு நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் காமெடியில் கதாபாத்திரத்தில் மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ராஜா ராணி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
தற்போது அவர் நடிப்பில் டகால்டி, பிஸ்கோத்து, டிக்கிலோனா போன்ற படங்கள் வெளிவர காத்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகனாக விஸ்வரூப எடுப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல, ஆனால் அதையும் சாதித்து விட்டார் சந்தானம்.
ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது மட்டுமில்லாமல் தற்போது ஒரு நடிகனின் அடுத்த கட்டத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி உள்ளாராம்.
தற்போது நடிக்க உள்ள படத்திற்காக கிட்டத்தட்ட 20 கிலோ வரை உடல் எடையை ஏற்றி செம்ம ஸ்டைலா KGF யாஷ் போல மாறி உள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

santhanam
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
