Connect with us
boomerang-movie

சந்தானம் நடிக்கும் காதல் படம்

santhanam love movie

சந்தானம் நடிக்கும் காதல் படம்

மன்னவன் வந்தானடி என்ற படத்தில் செல்வராகவனும், சந்தானமும் முதன் முதலாக இணைந்துள்ளனர். சந்தானம் கதாநாயகனாக நடிப்பதால் இந்தப் படத்தை காமெடிப்படம் என்று நினைத்துவிட வேண்டாம். ரெயின்போ காலனி படத்தை போன்றதொரு பக்கா காதல் கதையாம் இப்படம்.

இந்தப்படத்திற்கான கதாநாயகி தேடல் நடந்து வந்தது. அமலா பால் உட்பட பல நடிகைகளை பரிசீலனை செய்தார் இயக்குநர் செல்வராகவன். தமன்னாவை சிபாரிசு செய்தாராம் சந்தானம். அவர் கேட்ட சம்பளம் தயாரிப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்கை வர வைக்கும் அளவுக்கு இருந்ததாம். எனவே முன்னணி நடிகைகள் வேண்டாம் என்று செல்வராகவன் முடிவு செய்திருக்கிறார்.

கடைசியில் அதிதி போஹன்கர் என்ற மராத்தி நடிகையை சந்தானத்துக்கு ஜோடியாக்கியிருக்கிறார் செல்வராகவன். சந்தானத்துக்கு ஜோடியாகியிருக்கும் அதிதி ஸ்டேஜ் ஆர்டிஸ்டாம்! சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளாராம். கடந்த மாதம் முதல் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top