Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தானத்தின் குலுகுலு கலக்கலா இல்ல சொதப்பலா.? திரை விமர்சனம்

மேயாத மான், ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் ட்ராவல் ஜங்கியாக நடித்துள்ள டார்க் காமெடி படம் தான் குலு குலு. சந்தானத்தின் பட ஸ்டைலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம். இப்படம் எப்படி என வாங்க பார்ப்போம்..

அமேசான் காடுகளில் பிறந்த சந்தானம் உலகம் சுற்றிய வாலிபர். தற்பொழுது தமிழகத்தில் செட்டில் ஆகியுள்ளார். எந்நேரமும் கஞ்சா போதை, கிடைத்த வேலை பார்ப்பது, அடுத்தவர் யாரேனும் உதவி கேட்கும் பட்சத்தில் செய்வது என செல்கிறது இவரது வாழ்க்கை.

தங்களின் நண்பனை ஒரு க்ரூப் கடத்த, சந்தானத்திடம் உதவி கேட்கின்றனர். மறுபுறம் வெளிநாட்டில் இருந்து வந்த தங்கையை கொலை செய்ய துடிக்கிறது வில்லன் க்ரூப். சில இடங்களில் காமெடி, பல இடங்களில் சொல்ல வந்த கருத்து என கலந்து கட்டி திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.

சந்தோஷ் நாராயணன் இசை படத்துக்கு ப்ளஸாக இருக்கும் என எதிர்பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான். சரோஜா, சூது கவ்வும் போன்ற பட ஸ்டைலில் தனது சிந்தனையை புகுத்தியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார். எந்த ஒரு குறிப்பிட்ட ஜானர், ஸ்டைல் என எதிலும் ஒன்றிப்போகாமல் தனித்து நிற்கிறது இப்படம்.

ஆகமொத்தத்தில் சந்தானத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். முதல் இரண்டு படங்களில் தனது எழுத்தில் உள்ள தெளிவு இயக்குனரிடம் இப்படத்தில் இல்லை. கமெர்ஷியல் சினிமாவா அல்லது தனது சிந்தனைகளை விதைக்கும் சினிமாவா என புரியாமல் குழப்பிக் கொண்டுவிட்டார் இயக்குனர்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.25/5

Continue Reading
To Top