Connect with us
Cinemapettai

Cinemapettai

சந்தானத்தின் டகால்டி படைத்த சாதனை.. அட! அதுவும் இந்த ஊரில்

dakalti-records

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தானத்தின் டகால்டி படைத்த சாதனை.. அட! அதுவும் இந்த ஊரில்

சந்தானம் நடித்துள்ள டகால்டி திரைப்படம் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டத்தில் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கி உள்ள படம் டகலாட்டி. 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரித்துளளார். இதில் சந்தானம், யோகி பாபு, வங்காள நடிகை ரித்திகா சென், பிரம்மானந்தம், தருண் அரோரா, ராதாரவி, ரேகா, மனோபாலா என பலர் நடித்துள்ளார்கள். பிரபல பாடகர் விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவும் செய்துள்ளனர்.

இப்படம் திட்டமிட்டபடி வரும் 31ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளனர். அதாவது வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை விநியோகிஸ்தர்கள் மத்தியில் எழுந்துள்ளால் அதிக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் இப்படத்தை கொங்கு மண்டலத்தில் வெளியிடும் உரிமையை வாங்கி உள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 65க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டகால்டி படம் வெளியாக உள்ளது.

டாப் நடிகர்களின் படங்களுக்கு நிகராக சந்தானத்தின் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top