காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம்வந்த சந்தானம், தற்போது ஹீரோவாகி பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் செல்வராகவன் இயக்கும் ‘மன்னவன் வந்தானடி’ என்ற படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அதிதி போகங்கர் நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு லோகநாதன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் சந்தானத்துக்கு அறிமுக பாடல் ஒன்றை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துக் கொடுத்துள்ளார். இந்த பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு சந்தானம் ஆடிய நடனம் செல்வராகவனை மிகவும் கவர்ந்துள்ளதாம். அவருக்குள் இப்படியொரு நடனத் திறமை ஒளிந்திருந்ததை கண்டு வியந்த செல்வராகவன், சந்தான் ஒரு சிறந்த டான்சரும்கூட என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.