நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’சக்கப்போடு போடு ராஜா’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன.

இந்தப் படங்கள் பற்றி பேசிய சந்தானம், சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் இவர் மிகவும் கடினப்பட்டு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார் இதற்கு காரணம் இவரின் கடின உழைப்பே.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோரின் காமெடி வரிசையில் இடம் பெற்றிருந்தவர் காமெடி நடிகர் சந்தானம். காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த சந்தானம் இப்போது காணாமலே போய்விட்டார்.santhanam

முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால், சந்தானத்தின் காமெடி இல்லாமல் இருக்காது. அஜித், விஜய், சூர்யா, உதயநிதி ஸ்டாலின், ஆர்யா ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் வடிவேலுவைப் போன்று தானும் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்ற ஆசையில் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தில் தனியாக ஹீரோ அவதாரம் எடுத்தார்.

ஆனால், இப்படம் சுமாராக தான் ஓடியது . அதோடு தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மெடு பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

இப்படத்திற்கு முன்பாக, பவர்ஸ்டார், சந்தானம், சேது ஆகியோரின் கூட்டணியில் காமெடி படமான கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளிவந்தது. ஆனால், இப்படமும் சுமாராகதான் ஓடியது .

தொடர்ந்து இனிமே இப்படித்தான் படமும், பேய் சீசனில் தில்லுக்கு துட்டு படத்திலும் நடித்திருந்தார். ஆனால், எந்த படமும் சந்தானத்துக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்த நிலையில், இவர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பட வாய்ப்புகளும் குறைந்தது. சந்தானம் இழந்த காமெடி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சூரி தற்போது காமெடியில் கலக்கி வருகிறார்.

’சக்கப்போடு போடுராஜா படத்தில் விவேக்கும் என்னுடன் நடிக்கிறார். இதில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்பதால் காமெடி கேரக்டரில் நடிக்க வேறொருவரை நடிக்க வைக்க நினைத்தோம். அப்படித்தான் விவேக்கிடம் பேசினோம். அவர் உடனே ஒப்புக்கொண்டு நடித்தார்.

எங்களின் டைமிங் சென்ஸ் படத்துக்கு பலமாக இருக்கும். ’சர்வர் சுந்தரம்’ படம் சமையல் கலைஞனை பற்றிய கதை. படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, கேட்டரிங் படித்திருப்பவர். அதனால் இந்த கதையை அவரால் மட்டுமே இயக்க முடியும்.

அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள ’மன்னவன் வந்தானடி’ படத்தின் 80 சதவிகித ஷூட்டிங் முடிந்துவிட்டது. உங்கள் எதிர்காலம் திட்டம் என்ன என்று கேட்கிறார்கள். எதிர்காலத்தில், என்னை நீங்கள் இயக்குனராக பார்க்கலாம். சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன்’ என்றார்.