Connect with us
Cinemapettai

Cinemapettai

திக்குவாய்னா அவ்ளோ பெரிய பிரச்சனையா.! விதியுடன் விளையாடும் சந்தானத்தின் சபாபதி ட்ரெய்லர்

sabhaapathy

Videos | வீடியோக்கள்

திக்குவாய்னா அவ்ளோ பெரிய பிரச்சனையா.! விதியுடன் விளையாடும் சந்தானத்தின் சபாபதி ட்ரெய்லர்

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு காமெடிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சந்தானம் சபாபதி எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் எம்எஸ் பாஸ்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் முழுக்க முழுக்க ரசிகர்கள் பிடிக்கும் எனவும்.சந்தானத்தை முந்தைய படங்களில் பார்த்ததை விட இப்படத்திலும் நிறைய காமெடி காட்சிகள் இருக்கும் எனவும் கூறியுள்ளனர். மேலும் இப்படத்தில் உள்ள காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் இப்படத்தில் சந்தானத்துக்கு தகுந்தமான ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் எனவும் இப்படம் சந்தானத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர். அதனால் தற்போது சந்தானம் இப்படத்தை முழுவதுமாக நம்பியுள்ளார். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top