fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தோனி இடத்தை நிரப்ப காத்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஆஸ்திரேலியா தொடர்!

Sports | விளையாட்டு

தோனி இடத்தை நிரப்ப காத்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஆஸ்திரேலியா தொடர்!

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் இந்திய அணியில் நிறைய அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஆஸ்திரேலியா இடையே ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளது.

இந்திய அணி தேர்வில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தின் மூலம் கலக்கி வந்த சஞ்சு சாம்சன் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்று உள்ளார்.

இவருக்கு டி 20 அணியில் ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலாம் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் அணியில் இருப்பார் அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தவான், கே. எல் ராகுல் ஓப்பனிங் இறங்கினால், அதன்பின் கோலி, மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், பாண்டியா ஆகியோர் என இந்திய அணி வலிமைமிக்க அணியாக உள்ளது.

பல வருடமாக இந்திய அணியில் இருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிய நிலையில் தற்போது அணிக்குள் வந்துள்ளார் சஞ்சு சாம்சன். தோனி இல்லாத சமயத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தோனியின் இடத்தை சஞ்சு சாம்சன் நிரப்புவாரா என்பது ஆஸ்திரேலியா தொடரில் தெரிந்துவிடும்.

sanju-samson

sanju-samson

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top