சொல்லியே ஆகணும், அப்படி ஒரு அதிரடி ஆட்டம்.. எந்த ஒரு கேப்டனும் செய்யாத புதிய சாதனை!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 ஆம் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின . 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட இந்த ஆட்டம் கடைசிவரை விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வெறி ஆட்டம் ஆடினார், ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர் கோப்பையில் நானும் இருக்கிறேன் என்றார். ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் அபாரமாக விளையாடிய 50 பந்துகளுக்கு 96 ரன்களும், தீபக் ஹூடா 28 பந்துகளுக்கு 64 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே பென் ஸ்டோக்ஸ் விக்கெட் இழந்து தடுமாறியது. பட்லர், துபே, ரியான் பராக் போன்ற அதிரடி வீரர்கள் எல்லாம் வருவதும் போது மென விக்கெட்டை பறிகொடுத்தனர்.

Samson-Cinemapettai.jpg
Samson-Cinemapettai.jpg

மறுமுனையில் கேப்டன் சஞ்சு சாம்சன் நங்கூரம் போல் நின்று விளாசித் தள்ளினார். மொத்தம் 63 பந்துகள் பிடித்த அவர் 119 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் இதுதான் சஞ்சுவின் பெஸ்ட் ஸ்கோர். இதில் 7 சிக்ஸ், 12 பவுண்டரிகள் அடக்கம். ஒரு கேப்டனாக முதல் போட்டியிலேயே ஐபிஎல்லில் சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான்.

Samson1-Cinemapettai.jpg
Samson1-Cinemapettai.jpg

போட்டியை ராஜஸ்தான் அணி வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இறுதிவரை களத்தில் நின்று போராடினார் சஞ்சு, கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் அடிக்க முயன்ற சாம்சன் பவுண்டரி லைனில் கேட்ச் மூலம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்