Sanju - Ranbir Feat

சஞ்சய் தத்

பாலிவுட் நட்சத்திரங்களான சுனில் மற்றும் நகரிஸ் தத் தம்பதியினரின் மகன். 1980 கலில் நடிகர் அவதாரம் எடுத்தார். ஐவரும் சர்ச்சையும் என்றுமே உடன் பிறவா சகோதரர்கள் தான். முதலில் போதைப்பொருள், பின் ஏ கே 57 , கைது, மூன்று திருமணங்கள் என்று இவர் வாழ்க்கையே சினிமா போல பல ட்விஸ்டுடன் தான் இருக்கும்.

Ranbir Kapoor Sanjay Dutt

இயக்குனர் சஞ்சயின் நெருங்கிய நண்பரும், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ்குமார் ஹிராணி சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் “சஞ்சு”.

இப்படத்தில் சாஞ்சுவாக ரன்பிர் கபூர் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று சொல்ல வேண்டும். சஞ்சய்தத்தின் போதைப்பழக்கம், அம்மாவுடனான அதீத அன்பு, அப்பாவின் மீது பயம் கலந்த வெறுப்பு, நட்புக்காக ஏங்குவது, வாழக்கையில் ஜெயிக்க போராடுவது, தான் தீவிரவாதி அல்ல என நிரூபிக்க முயற்சி எடுப்பது என்று சஞ்சய் தத்தின் பல பரிணாமங்களை சொல்லியுள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  9 மணல் குவாரிகள் திடீர் மூடல்; 10 லட்சம் பேர் வேலை இழப்பு!

தந்தை சுனில் தத்தாக பர்வேஸ் ராவல், சஞ்சய் தத்தாக ரன்பிர் கபூர், மற்றும் அவரின் நெருங்கிய நண்பரான கமலேஸாக விக்கி கௌஷல் அசத்தியுள்ளார் தங்கள் நடிப்பால். ஒளிப்பதிவு, பின்னணி இசை, கதாபாத்திரம் தேர்வு என அனைத்தும் மிக பொருத்தம்.

paresh rawal and vicky kaushal in sanju

சினிமாபேட்டை அலசல்

சினிமாவுக்கு என்று தனி சுதந்திரம் உண்டு, எளிதில் நாம் நம் கற்பனையை கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக கொடுக்க முடியும். இப்படத்தை பொறுத்தவரை உள்ளது உள்ள படி சொல்லு மென்று நினைத்து சென்றால் உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும். முழுவதும் சஞ்சயின் இமேஜை மக்களிடம் உயர்த்தும் வகையில் தான் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.(விரைவில் அரசியல் என்ட்ரி கொடுப்பார் போல மனிதர், அதனால் வாழ்க்கையில் இவர் தரப்பின் வாதத்தை இப்படம் தந்துள்ளது.)

அதிகம் படித்தவை:  மனோஜ் ஷ்யாமளானின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ திரில்லர் படம் கிளாஸ் - புதிய ட்ரைலர் .

தோணி படத்தை போல கற்பனைகள் தூக்கலான பயோபிக் தான் சஞ்சு. உள்ளதை சொல்லுகிறோம் என அவரின் போதை பழக்கத்துடன் ஆரம்பித்து விட்டு பின்னர் டிராக் மாத்தி விட்டனர். எனினும் பொழுது போக்கு அம்சம் உள்ள, ரசிகர்களை இன்ஸ்பயர் பண்ணும் படம் தான் இது.

சினிமாபேட்டை ரேட்டிங்: 3 / 5

sanju
சினிமாபேட்டை வெர்டிக்ட்

இயக்குனர் ராஜ் குமார் ஹிராணிக்கும், ரன்பிர் கபூருக்கும் தான் முழு கிரெடிட். தேசிய விருது மற்றும் பிலிம் பார் என பல அவார்டுகளை தட்டி செல்லப்போகின்றனர் இவர்கள். தமிழில் டப் செய்து விட்டிருந்தால் இங்கும் நல்ல லாபம் பாத்திற்கும் இப்படம். கோட்டை விட்டு வித்திட்டது தயாரிப்பு நிறுவனம்.