fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சினிமால அவனுக்கு ஒண்ணுமே வராது.. சூர்யாவை பற்றி பேசிய தளபதியின் நண்பன் வீடியோ!

suriya-vijay-amazon

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமால அவனுக்கு ஒண்ணுமே வராது.. சூர்யாவை பற்றி பேசிய தளபதியின் நண்பன் வீடியோ!

கோலிவுட்டில் பின்புலத்துடன் அறிமுகமானாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னேறி, தற்போது தயாரிப்பாளர், நடிகர் என வளர்ந்து  நிற்பவர் தான் நடிகர் சூர்யா.

அதுமட்டுமில்லாமல், சூர்யா இந்த இடத்திற்கு வருவதற்கு பல தடைகளை தாண்டி இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது இவரது நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, அவருக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது என்றே கூறலாம்.

இந்த நிலையில் சூர்யாவைப் பற்றி தளபதியின் நண்பரான சஞ்சீவ் தெரிவித்திருக்கும் தகவல்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றன.

அதாவது சூர்யா, சஞ்சீவ், விஜய் ஆகியோர் ஒரே காலேஜில்தான் படித்தார்களாம். மேலும் சஞ்சீவ் ஒரு பேட்டியில் சூர்யாவைப் பற்றி, ‘சூர்யா ரொம்ப அமைதியானவர், அடக்கமானவர், பொறுமைசாலி.

சினிமா காலத்தை தொடங்கிய போது நடிக்க, நடனம் என்று அவனுக்கு ஒண்ணுமே வராது. அவர் ‘இப்போ ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு’ என்ற டயலாக் எல்லாம் பேசுறத பார்க்க ஆச்சரியமா இருக்கு. ஏனா சூர்யாக்கு நடிப்பு சுத்தமாக வராது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், சூர்யாவுக்கு சுத்தமா டான்ஸ் ஆடவே தெரியாதாம். இப்ப சூர்யா இந்த அளவுக்கு டான்ஸ் ஆடுவதற்கு முக்கியமான காரணம் டான்ஸ் மாஸ்டர் கிஷோர் தான் என்றும் கூறியிருக்கிறார் சஞ்சீவ்.

அதேபோல், சூர்யா இப்போது இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய கடின உழைப்பு மட்டும் தான் காரணம் என்று பெருமிதத்தோடு தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ்.

எனவே, சூர்யாவைப் பற்றிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு, சூர்யாவின் ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

suriya-sanjeev

suriya-sanjeev

அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top