Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா.? முறைத்தபடி சஞ்சீவி அளித்த தரமான பதில்

bb5-sanjeev-entry

Videos | வீடியோக்கள்

விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா.? முறைத்தபடி சஞ்சீவி அளித்த தரமான பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் சென்றுள்ளார். ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ப்ரோமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. சஞ்சீவ் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதை பார்த்த போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். பின்பு சுதாரித்துக் கொண்ட அனைவரும் பிக்பாஸ் எச்சரிக்கையை மீறி அவரை வரவேற்க ஓடுகின்றனர்.

சஞ்சீவிடம் போட்டியாளர்கள் எதற்கும் ரியாக்ட் பண்ண கூடாது என்று சொல்லி இருக்காரு என்கிறார்கள். அதற்கு சஞ்சீவ் இப்பவாவது ரியாக்ட்  பண்ணலாமே என்று சொன்னவுடன் அனைவரும் சந்தோஷமாக கூச்சலிடுகின்றனர்.

அனைவரும் கார்டன் ஏரியாவில் இருக்க அண்ணாச்சி மட்டும் வீட்டுக்குள் இருக்கிறார் இதனால் சஞ்சீவ் அண்ணாச்சி வந்தால் தான் நான் வீட்டுக்கு வருவேன் என்று கலகலப்பாக சொல்கிறார். புதிய போட்டியாளரை காண அண்ணாச்சி ஆர்வத்துடன் வெளியில் வருகிறார்.

சஞ்சீவ் அண்ணாச்சியிடம் 55 நாள் உங்களை ரொம்ப பாதித்து இருக்கு போல என்றும் மற்ற சீசன்களை போல் இந்த சீசனும் நன்றாக உள்ளது என்று கூறுகிறார். விஜய் சார் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறாரா என்று போட்டியாளர்கள் சஞ்சீவிடம் கேட்கிறார்கள். அதற்கு சஞ்சீவ் பதில் கூறாமல் தலையை ஆட்டிக் கொண்டு நிற்கிறார். தளபதி விஜய் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றாலும் இனிமேல் தன் நண்பனுக்காக நிச்சயம் பார்ப்பார் என்று அவர் கூறி உள்ளாராம்.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள  சஞ்சீவ் அங்கு பல அதிரடி திருப்பங்களை  ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வரவு பிரியங்கா உட்பட அனைத்து போட்டியாளர்களுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

புதிய வரவாக வீட்டுக்குள் செல்லும் சஞ்சீவ் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்வார். அவருக்கு சின்னத்திரை நடிகர்,நடிகைகள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top