Connect with us
Cinemapettai

Cinemapettai

ராஜு ஆட்டோ மீட்டர், அடிக்கனும்னா அடிக்கலாம் வா.. ஓப்பன்னாக போட்டுடைத்த சஞ்சீவ் வீடியோ

priyanka deshpande raju

Videos | வீடியோக்கள்

ராஜு ஆட்டோ மீட்டர், அடிக்கனும்னா அடிக்கலாம் வா.. ஓப்பன்னாக போட்டுடைத்த சஞ்சீவ் வீடியோ

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் தொகுப்பாளரும், நடிகருமான சஞ்சீவ் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறார். இவர் முதலில் மானாட மயிலாட நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த திருமதி செல்வம் தொடரில் மிகவும் பிரபலமானார்.

சஞ்சீவ், விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால் இவருடைய என்ட்ரி பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் டைனிங் டேபிளை சுற்றி அமர ஒவ்வொருவர் பற்றியும் தனது கருத்தை சொல்லுகிறார் சஞ்சீவ்.

முதலாவதாக சஞ்சீவ், வருண் பற்றி பேசத் தொடங்கினார். முதல் வாரத்திலிருந்து அமைதியாக இருந்த வருண் தற்போது விளையாட ஆரம்பித்து இருக்கிறார் என்றும் ஹீரோ போல் கலக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் விளையாடுவது எனக்க, ரொம்ப பிடித்து இருக்கு என்று வருணை பற்றி பேசினார்.

பிரியங்கா பற்றி சஞ்சீவ் பேசும்பொழுது, புரியாத புதிர் தான் பிரியங்கா, கெஞ்சினான் கெஞ்சுவது மிஞ்சினால் மிஞ்சுகிறது எல்லாத்துலயும் அதிகப்படியான பாசம் மற்றும் கோபத்தை காட்டுகிறார் என்றார்.

இந்த பிக்பாஸ் வீட்டில் விளையாட்டை அழகான மீட்டரில் விளையாடுபவர் தான் ராஜீ. ஆட்டோவில் மீட்டர் சூடாவது போல் ராஜுக்கும் அந்த மீட்டருக்கும் சூடு பிடித்தால் விளையாட்டு இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று சஞ்சய் தனது கருத்தை ஹவுஸ் மேட்ஸ் இடம் வெளிப்படுத்தினார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ராஜூக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது சஞ்சீவ் என்ட்ரியால் ரசிகர்களின் கவனம் இவர்மேல் செல்ல அதிக வாய்ப்புள்ளது. சஞ்சீவின் படபட பேச்சுக்கு என்றே ரசிகர் கூட்டம் உள்ளது. பிக்பாஸ் வீட்டில் பேசினால்தான் கண்டெண்டே. இதனால் இனிவரும் பிக் பாஸ் ப்ரோமோகளில் கண்டிப்பாகச் சஞ்சீவ் இருக்க வாய்ப்புள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top