நடராஜனின் வருகை இந்த பௌலர்க்கு தான் ஆப்பு.. வைரலாகுது சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து

தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன். இந்த வருட ஐபிஎல் இவருக்கு சிறப்பானதாக அமைந்தது. ஹைதெராபாத் அணியில் நடராஜனுக்கு 16 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. துல்லியமான யார்கர் பால் போட்டு அசத்தினார். இந்த வருடம் ஐபிஎல் இல் 71 பர்கர் பந்துகளை கடைசி கட்டத்தில் மட்டும் வீசி, 57 ரன்கள் தான் கொடுத்தார்.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் பேக் அப் வீரராக சேர்க்கப்பட்டார். வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்றாக நடராஜன் டி 20 அணிக்குள் வந்தார். அதன்பின் சைனி காயம் அடைந்ததால் ஒருநாள் அணிக்குள்ளும் நடராஜன் வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். பின்னர் டி 20 யில் கலக்கி வருகிறார்.

முதல் டி 20 யில் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார் 30 ரன் கொடுத்து. இரண்டாவது போட்டி சூப்பர் பேட்டிங் பிட்ச், எனினும் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மற்ற அனைத்து பௌலர்களும் ரன்களை தாராளமாக வழங்கினர்.

இந்நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் சொல்லியுள்ள கருத்து வைரலாகி வருகின்றது. “நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கிறார். எனவே டி 20 போட்டிக்கான டீம்மில் ஷமி அவர்களின் இடத்துக்கு பிரச்சனை.

அவரது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி பும்ரா மற்றும் நடராஜன் ஆகிய இருவரை குறுகிய ஓவர் போட்டிகளில் வைத்து விளையாட விரும்புவார்கள். சாஹர் ஸ்விங் பந்து வீசுபவர், எனவே ஷமி அவருக்கு தான் அதிக அழுத்தம் காணப்படும்.” என சொல்லியுள்ளார்.

yorkar-natarajan
yorkar-natarajan