sanjaydutt

sanjayduttமும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்து வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், அவ்வப்போது பரோலில் வெளிவந்தது மட்டுமின்றி நன்னடத்தை காரணமாக தண்டனை காலத்திற்கு முன்பே வெளியே வருகிறார்.

நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 25ஆம் தேதி சஞ்சய்தத் வெளியே வரவுள்ள நிலையில் அவரது குடும்பத்தினரை விட ஒரு ரசிகர் பெரும் உற்சாகமாகியுள்ளாராம்.

மும்பையில் சொந்தமாக ஓட்டல் வைத்திருக்கும் நூர்முகமதி என்ற நபர் சஞ்சய் தத் விடுதலையாகும் நாளில் தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர் அனைவருக்கு இலவச சிக்கன் உணவு தர முடிவு செய்துள்ளாராம். அந்த உணவுக்கு அவர் சஞ்சுபாபா என்ற பெயரையும் வைத்துள்ளாராம்.