சினிமாவில் மட்டுமல்ல பல பிரபலங்கள் கூட விஜய்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அப்படி பார்க்கையில் பாக்யராஜ் மகன் ஷாந்தனுவும் விஜய்யின் பெரிய ரசிகர். இவரின் திருமணத்திற்கு நடிகர் விஜய் சென்ற போது இளையதளபதியை தாலி எடுத்து தரச்சொல்லி திருமணம் செய்து கொண்டார்.

இதை நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவிடம் கூறிய போது கோபப்பட்டாராம். தாலியெல்லாம் பெரியவர்கள் தான் எடுத்து தரவேண்டும் நீங்கள் ஏன் எடுத்து கொடுத்தீர்கள் என்று கோபபட்டாராம்.

இதை விஜய் சாந்தனுவிடம் விவரித்து சொல்ல, என்னை பொறுத்தவரை பெரியவர்கள் என்பதை விட மனதுக்கு ரொம்ப பிடித்தவர்கள் செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம் அண்ணா என்று ஷாந்தனு விஜயிடம் கூறினாராம்.

அப்புறம் திருமணம் முடிந்தபின் முதல் விருந்தை விஜய்தான் அளித்தார் என்பது தனி கதை. இந்த நிகழ்வை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நடத்திய நலத்திட்ட உதவிகள் செய்த விழாவில் ஷாந்தனு நேரடியாக சொல்லி விட்டாராம்.