தமிழ் சினிமாவில் 90 ல் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சங்கவி இவர் முதன் முதலில் பாக்யராஜ் படத்தில் தான் நடிக்க இருந்தார் ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. சங்கவிக்கு சின்ன வயதில் இருந்தே சினிமா ஆர்வம் உண்டு, செனன்னைக்கு ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக வந்தப்பதான் இயக்குனர் பாக்யராஜ் நடிக்க கேட்டார் ஆனால் சங்கவி அப்பா படிக்கணும் நடிப்பு இப்பொழுது வேணாம் என கூறிவிட்டார்.

vijay
vijay

பின்பு சில காலங்கள் கடந்தன அதன் பின்பு அஜித்துடன் அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சங்கவிக்கு, அந்த படத்தில் தனது திறமையை காட்டி நடித்தர், இந்த படத்தில் நடித்து முடித்ததும் நடிகர் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த படம் தான் ரசிகன்.

ரசிகன் படத்தை எஸ்.ஏ சந்திர சேகர்தான் இயக்கினார் இந்த படத்தில் நடிகை சங்கவியை கொஞ்சம் கிளாமராக நடிக்க வைக்க தயங்கினார் சந்திர சேகர், பின்பு கிளாமராக ரோல் என்பதால் சங்கவியும் நடித்தார் படமோ தாறுமாறாக ஹிட் ஆனது.

அதனால் பல இயக்குனர்கள் இவருக்கு கிளாமர்தான் சூட் ஆகும் என கன்பார்ம் பண்ணிவிட்டார்கள் அதனால் தொடர்ந்து கிளாமராக தான் படத்தில் நடித்து வந்தார் இவர் விஜய்யுடன் அதிகமாக படம் நடித்துள்ளார், கிளாமருக்காகவே அதிகமாக விஜய் படத்தில் கமிட் செய்தார்கள் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது விஜய்யைகூட ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பார்த்துள்ளேன் ஆனால் அஜித்தை இதுவரை எங்கும் பார்த்ததில்லை என கூறியுள்ளார்.