தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’.இதன் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி ‘பாகுபலி’ தென்னிந்திய சினிமாவை தேசிய அளவில் பேச வைத்தது.

‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேச வைக்கும். அதுதான் எங்கள் குறிக்கோள். ’சங்கமித்ரா’ எந்த ஒரு மேற்கத்திய சாயலும் இல்லாமல் மொத்தமாக இந்தியப் படமாக இருக்கும் என்றாலும், சர்வதேச ரசிகர்களையும் மனதில் வைத்துள்ளோம் என்று கூறினார்.sundar-c-story_

மேலும்  இதுவரை எனது வெற்றிகள் எல்லாமே இந்தப் படத்துக்கான ஏணிப்படிகள் தான். ‘சங்கமித்ரா’ தான் எனது இயக்குநர் வாழ்க்கையில் முக்கியப் படமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி.

இப்பொழுது  சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு-2’ படப்பிடிப்பு காரைக்குடியில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. அவ்னி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும் இந்த படத்தில் இடம் பெறுகிறார் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, சுந்தர்.சி. இயக்கவிருக்கும் பிரமாண்ட படமான ‘சங்கமித்ரா’ படம் குறித்தும் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகை குஷ்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘சங்கமித்ரா’ குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குஷ்பு கூறியிருப்பதாவது,

‘சங்கமித்ரா’ தயாராகிறது… அதற்கான செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செட் அமைக்கும் பணி முடிந்தவுடன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. எனவே ‘கலகலப்பு-2’, ‘சங்கமித்ரா’ என இது ஒரு டபுள் தமாகா’

இவ்வாறு கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கேன்ஸ் பிலிம்ஸ் விழாவில் ‘சங்கமித்ரா’ படம் தொடங்கப்பட்டது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.Director_Sundar_C_Copied-Movies_Only

சங்கமித்ராவாக நடிக்கவிருந்த ஸ்ருதி ஹாசன் விலகியதால் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகை திஷா படானி சங்கமித்ராவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘கலகலப்பு-2’ படத்தின் பணிகள் முடிந்த பிறகு டிசம்பரில் ‘சங்கமித்ரா’ பட பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கலகலப்பு-2’ வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here