fbpx
Connect with us

Cinemapettai

மெகா பட்ஜெட் சங்கமித்ரா படத்தின் நடிகை இவுங்கதான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

News | செய்திகள்

மெகா பட்ஜெட் சங்கமித்ரா படத்தின் நடிகை இவுங்கதான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

sangamithra

இதன் மொத்த படப்பிடிப்பையும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விட்டு, அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. 8-ஆம் நூற்றாண்டில் உள்ள அழகியான ‘சங்கமித்ரா’ தனது ராஜ்ஜியத்தை காப்பாற்றுவதற்காக எதிர்கொள்ளும் துயரங்களும், சோதனைகளுமே இப்படத்தின் மைய்யக்கருவாம்.

பல்வேறு ராஜ்ஜியங்கள் மற்றும் உறவுகளைப் பற்றிய இந்தக் கதை படம் பார்க்கும் ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் விதத்தில் சொல்லப்படவுள்ளதாம். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது.

sangamithra

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார், சுபா வசனம் எழுதுகின்றனர், திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

sangamithra

படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். சமீபத்தில், ‘கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’-யில் படத்தின் அறிமுக விழா நடந்தது. ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

தற்போது, இதன் டைட்டில் கேரக்டரில் ‘M.S.தோனி’ புகழ் தீஷா படானி நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி பின், சில காரணங்களால் விலகியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top