ஒரு நாளைக்கு 25 ஆயிரம்.. சங்கமம் பட நடிகையை வம்புக்கு இழுத்த பயில்வான்

Bayilvan Ranganathan : சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் மூலம் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார். அதிலும் குறிப்பாக நடிகையின் சொந்த வாழ்க்கையை விமர்சித்து வருகிறார்.

இதனால் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டாலும் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து இதை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சங்கமம் படத்தில் நடித்த நடிகை ஒருவரை வம்பு இழுத்து வீடியோ போட்டு இருக்கிறார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரகுமான், விந்தியா, ஸ்ரீவித்யா லாவண்யா போன்ற பலர் நடிப்பில் வெளியான சங்கமம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் விந்தியா.

தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை விந்தியா

இவர் மகளிர்க்காக, சார்லி சாப்ளின், ஆசை ஆசையாய் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் அரசியலில் இறங்கி விட்டார். இப்போது சூடு பிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் விந்தியாவும் வாக்கு சேகரித்து வருகிறார்.

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், நடிகைகள் பலரும் அரசியலுக்கு வந்த ஒவ்வொரு கட்சிக்கு மாறுகிறார்கள். இதில் விந்தியா இப்போதும் அரசியல்வாதி போல் பேசாமல் ஏதோ உளறி வருகிறார். விந்தியா பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2012ல் பிரிந்து விட்டனர். இப்போது விந்தியாவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு 25 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. அந்த 25 ஆயிரத்துக்கு இப்படியெல்லாம் பேசுவீங்க விந்தியா என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -