Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்ஷனுக்கு தல அஜித் அளவுக்கு மாஸ் காட்டி காமன் DP ரிலீஸ் செய்த சாண்டி! வெறுப்பு காட்டிய கவின் ரசிகர்கள்!
தமிழ் பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது சீசன்4 நிகழ்ச்சியானது விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 3-ல் சாண்டி மற்றும் கவின் இருவரும் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்து மட்டுமல்லாமல், இருவரும் சேர்ந்து கானா பாடுவது, நகைச்சுவை மற்றும் நடனத்தில் வாயிலாக மக்களை மகிழ்வித்து வந்தனர்.
அதேபோல் பிக்பாஸ் வீட்டில் கவின்,லாஸ்லியா இடையேயான காதல் முறிவின் போது ரொம்ப மன உளைச்சலில் அழுதுகொண்டிருந்த கவினை ஆதரவுடன் தேற்றி அரவணைத்தார் சாண்டி.
இவர்கள் இருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போலவே பிக்பாஸ் வீட்டில் சுற்றித் திரிந்தனர் .
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, சாண்டி கவின் மீது வைத்திருந்த பாசம் வேஷம் என்று நினைக்கும் அளவிற்கு கவின் ரசிகர்களை சில நாட்களாகவே வெறுப்பேற்றி வருகிறார்.
ஏனென்றால் கவினை மறந்து, தர்ஷனை தல அஜித் அளவுக்கு மாஸ் காட்டும் காமன் DP ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாண்டி.

tharshan
கவினுடைய DP-யை ரிலீஸ் செய்தால், உங்களைவிட வளர்ந்து விடுவார் என்று பொறாமையா? நீங்க கவினின் ஃப்ரெண்ட் என வேஷம் போடுறீங்க என்றும் வேஸ்ட் சாண்டி என்றும், தங்கள் கமெண்ட்களில் கவின் ரசிகர்கள் சண்டியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
