fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹாரர் திரில்லர் படத்தில் ஹீரோவாக சாண்டி மாஸ்டர்! வைரலாகுது டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாரர் திரில்லர் படத்தில் ஹீரோவாக சாண்டி மாஸ்டர்! வைரலாகுது டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நம் சென்னை சேர்ந்தவர் சாண்டி மாஸ்டர். சந்தோஷ் குமார் என்பது நிஜப்பெயர், சாண்டி என்பது ஸ்டேஜ் நேம். சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர். பின்னர் ஸ்கூல், காலேஜ் நிகழ்ச்சிகளில் கலக்க, அது கொடுத்த நம்பிக்கையில் நடனத்தை தனது கேரியராக எடுத்தவர்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றினார். நல்ல வரவேற்பை பெற்றார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்களித்து வருகிறார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

சாண்டி மாஸ்டர் நேரம் சம்பந்தப்பட்ட horror திரில்லர் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நம்பிக்கை சந்துரு இப்படத்தை இயக்குகிறார். மூணு முப்பத்திமூணு என்பதே தலைப்பு.

sandy in 3:33

பாம்பூ ட்ரெஸ் நிறுவனம் சார்பில் ஜீவிதா தயாரிக்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை அமைக்கிறார். சதிஷ் மனோகரா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் டீஸர் வெளியாகுமாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top